Ad Code

Responsive Advertisement

SMS வந்தால் மட்டும் SMART RATION CARD பெற ரேஷன் கடைக்குச் செல்லுங்கள்.

செல்லிடப்பேசியில் எட்டு இலக்க ரகசிய எண் உங்களுக்கு வந்தால் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை பெற ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும். அந்த எண்ணை நியாய விலைக் கடை காண்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.


நியாய விலைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் செல்லிடப்பேசி எண்ணும், ஆதார் எண்ணும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசிக்கு எட்டு இலக்கம் கொண்ட ரகசிய எண்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த எண்களுடன் உங்களது செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்குச் செல்ல வேண்டும்.

அதனை விற்பனையாளரிடம் காண்பித்து புதிய மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். பழைய அட்டையிலும் பொருள்கள்: மின்னணு குடும்ப அட்டை படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மின்னணு குடும்ப அட்டையைப் பெறாதவர்களுக்கு பழைய அட்டையை (தாள்களைக் கொண்டது) அடிப்படையாகக் கொண்டு பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் மதுமதி தெரிவித்தார். 

எப்போது முடியும்: மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி, இரண்டு மாதங்களில் அதாவது ஏப்ரல், மே மாதங்களுக்குள் மாநிலம் முழுவதும் வழங்கி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement