Ad Code

Responsive Advertisement

*NEET தேர்வு மட்டும் மருத்துவக் கல்வியில் தரத்தைக் கொண்டு வர முடியுமா?*

பாடத்திட்டம்,போதனா முறை, தரமான ஆசிரியர்கள் போதிய ஆசிரியர்கள் அடிப்படைக் கட்டமைப்பு தேர்வு சமூகப் பார்வையுடன் கூடிய கல்வி முறைகள் கண்காணிப்பு இன்ன பிற ஆகியனவே தரத்தை உறுதி செய்ய முடியும்.

மருத்துவக் கல்வியில் சுமார் 80 சதமும் மருந்து உபகரணங்கள் உற்பத்தியில் 90 சதமும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் கொடி கட்டிப் பறக்கும தனியார் மயமிக்க இந்திய தேசத்தில் எப்படி தரமான மருத்துவக் கல்வியைஉறுதி செய்ய முடியும்...

தனியார் மருததுவக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவோம் எனக் கூறி அதற்கு முறையற்ற வகையில் அனுமதி வழங்கி பல்லாயிரம் கோடி சம்பாதித்த கேதன் பரேக் போன்றவர்கள் இருக்கும் வரை எப்படி தரமான மருத்துவக் கல்லூரிகள் வர முடியும்..

மருத்துவக் கல்லூரிகளை ஆரம்பிப்பது மருத்துவ மனைகளை ஆரம்பிப்பது மருத்துவர்களை நியமிப்பது என மாநில அரசே அனைத்தையும் செய்யும் போது மத்திய அரசிற்கு இதில் என்ன வேலை..

தர நிர்ணயம் என்ற பெயரில் மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதும் அதனை தனதாக்கிக் கொள்ளும் மத்தியப் பேரரசின விரிவாக்கம என்பதில் என்ன சந்தேகம்.....

புதிய கல்விக் கொள்கையில் தர நிர்ணயம் என்ற பெயரில் பத்தாம் வகுப்பு முதல் பி.எச்டி வரை முடித்திருந்தாலு்ம் மத்திய அரசின் தேர்வு எழுதித் தீரவேண்டும் என்ற கட்டாய அகில இந்தியத் தேர்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியுமா....

நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்வி பயின்றாலும் படித்து முடித்த பின் பதிவு செய்தற்கும் மேற்படிப்புக்கும் ஒரு நுழைவுத் தேர்வு ஒன்று இருக்கிறது என்பது தெரியதா.....

தொடரும்...
(நன்றி.பேரா.இராஜமாணிக்கம்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement