Ad Code

Responsive Advertisement

ICT TEACHERS AWARD : ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

டிஜிட்டல் கற்பித்தல் முறைக்கான, ஐ.சி.டி., விருதுக்கு, ஜூலை, 31க்குள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

மத்திய அரசின், கல்வி தொழில்நுட்ப நிறுவனம், ஆண்டுதோறும், கணினி வழியில், டிஜிட்டல் கற்பித்தல் மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு, ஐ.சி.டி., விருதுகளை வழங்குகிறது. நடப்பாண்டில், தேசிய அளவில், 87 விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

இதற்கான விண்ணப்பங்களை, மாநில பள்ளிக்கல்வித் துறையின், ஐ.சி.டி., குழுவுக்கு அனுப்பும்படி, கல்வி தொழிற்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு, ஜூலை, 31க்குள் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை, ஆக., 31க்குள், சிறந்த விண்ணப்பங்களை தேர்வு செய்து, விருதுக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement