Ad Code

Responsive Advertisement

CPS : பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின்,கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தைஅரசு நீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர். 2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தைகொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது.


இந்த குழு அமைக்கப்பட்டு, ஓர் ஆண்டை தாண்டிய நிலையில்,இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குழுவின் ஆயுட்காலம் முடிவதும், பின், ஆயுள் காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளது. வழக்கம் போல், டிச.,25ல், குழுவின் ஆயுட் காலம் முடிந்தும், நீட்டிக்கப்படவில்லை. 

இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், குழுவின் ஆயுட்காலத்தை, மூன்று மாதங்கள் நீட்டித்து, மார்ச், 7ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அவகாசமும் முடிந்து, 11 நாட்கள் ஆகிறது. இன்னும், நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்யவில்லை; குழுவின் ஆயுட்காலமும் நீட்டிக்கப்படவில்லை. அதனால், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு தொடருமா அல்லது அப்படியே கிடப்புக்கு போகுமா என, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கவலையில் உள்ளனர்.

விடிவு கிடைக்குமா?

* அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, பழைய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்பட்டு, 2003 முதல், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலானது. இதில், 4.55 லட்சம் பேர் உறுப்பினராக உள்ளனர். அவர்களில், ஓய்வு பெற்றோர், இறந்தோர், 6,000 பேர். அவர்களுக்கு இன்னும் பணப்பலன் கிடைக்கவில்லை

* திட்டம் அமலான பின், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பங்களிப்பு தொகைவசூலிக்கப்பட்டது. அவற்றின் நிலை என்னவென்றும் தெரியவில்லை.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement