Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் சங்க போராட்டம்: பின்னணியில் ஆளுங்கட்சி

மத்திய அரசுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று போராட்டம் நடத்துகின்றனர். ஆளுங்கட்சி பின்னணியில், இந்த போராட்டம் நடப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக, ஆசிரியர் சங்கத்தினர், இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில், 40 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன.

அண்ணா பல்கலை, திறந்தநிலை பல்கலை, காந்தி கிராம பல்கலை என, சில பல்கலை சங்கத்தினரும் பங்கேற்கின்றனர். இந்த போராட்டம், ஆளுங்கட்சியின் பின்னணியில், மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்படுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து, கல்வித்துறையினர் கூறியதாவது: 

கடும் நெருக்கடி : வழக்கமாக போராட்டம் நடத்த, ஆசிரியர் சங்கத்தினருக்கு அனுமதி கிடைக்காது. தற்போது, சசிகலா தரப்பினருக்கு, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறை மூலம், மத்திய அரசு கடும் நெருக்கடி கொடுக்கிறது. இந்நிலையில், 'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், போராட்ட ஏற்பாடுகள் நடந்தன. அதை, ஆளுங்கட்சி கையில் எடுத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை, ஆசிரியர், மாணவ சமுதாய போராட்டமாக மாற்ற, ஆளுங்கட்சி தரப்பில், சில ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் பேசப்பட்டது. அதன்படி, அனைத்து ஆசிரியர் சங்கத்தினரும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும்; மத்திய அரசுக்கு எதிராக, கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ரகசிய உத்தரவு : அதற்கு தேவையான செலவுகளையும், ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், மறைமுகமாக செய்வதாக தகவல். இந்த போராட்டத்தில் பங்கேற்க, ஆசிரியர்களுக்கு எந்த தடையும் விதிக்க கூடாது என, முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, ரகசிய உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement