Ad Code

Responsive Advertisement

மதுக்கடைக்கு மாணவியர் எதிர்ப்பு!!!

குன்னுார் பஸ் நிலையம் அருகே, மவுன்ட் ரோடு பகுதியில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பள்ளி மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் மவுன்ட் ரோடு பகுதியில், நகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, பெரிய பள்ளிவாசல், மாரியம்மன் கோவில் உட்பட பல வழிபாட்டு தலங்களும், கல்வி நிறுவனங்களும் உள்ளன.இந்நிலையில், பிரதான சாலையில், மதுக்கடை வைக்க, இரவோடு
இரவாக, டாஸ்மாக் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதை கண்டித்து, அப்பகுதி பெண்கள் நேற்று காலை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, பள்ளி
மாணவியர், 1500 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். இருப்பினும், மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. 'இந்த பிரச்னைக்கு, உரிய தீர்வு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், இரண்டு மணி நேர நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement