பொறியியல் கல்லூரியில் சேர பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாநில அரசுடன் கலந்து பேசாமல் கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இத்திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு வரும் 2018-19-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், தில்லியில் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் இன்று நடைபெற்ற மாநில உயர்கல்வித் துறை அமைச்சர்களுக்கான மாநாட்டில் இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது, கூட்டத்தில் உரையாற்றிய தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டும் என்றும், +2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அன்பழகன் வலியுறுத்தினார்.
நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்ப குழுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் நுழைவுத் தேர்வு நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று அன்பழகன் தெரிவித்தார்.
மேலும், நுழைவுத் தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இதுபோன்ற முக்கிய கொள்கை முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்பாக, மத்திய அரசு மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்திய அரசு தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகவும், எனவே 2018-ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அன்பழகன் வலியுறுத்தி பேசினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை