Ad Code

Responsive Advertisement

ஆய்வக உதவியாளர் பணி தரவரிசை தயாரிப்பு தீவிரம்-சென்னைக்கு எப்போது சான்றிதழ் சரிபார்ப்பு?

பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது.



அரசு பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, 2015 மே மாதம் நடந்தது. கடந்த மாதம், தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து, மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏப்., 9 முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தற்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியலை, அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். சில மாவட்டங்களில், மதிப்பெண் பட்டியலை, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
இதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் போன்றவற்றை இணைத்து, தரவரிசை தயார் செய்யப்படுகிறது.
இதில், இட ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு படி, இறுதியாக தேர்வாகும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


சென்னைக்கு எப்போது

ஆய்வக உதவியாளர் பணியில், சென்னைக்கு மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவில்லை. சென்னையில் மிகக் குறைந்த காலியிடங்கள் மட்டும் இருந்தன. அவற்றை
நிரப்புவதில், அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால், சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. அதனால்,
சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்படவில்லை. சென்னையில், சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது நடக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement