Ad Code

Responsive Advertisement

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பிழை திருத்த வாய்ப்பு

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதற்கு முன், பிழைகளை சரி செய்ய, ரேஷன் கார்டு தாரருக்கு, உணவுத் துறை வாய்ப்பு வழங்கியுள்ளது. 

தமிழக அரசு, மக்களிடம் இருந்து, 'ஆதார்' எண்ணை பெற்று, அவற்றில் உள்ள விபரங்களின் அடிப்படையில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. அந்த கார்டில் பிழை இருப்பதாக, சிலர் புகார் எழுப்பினர். சுற்றறிக்கைஇதையடுத்து, ரேஷன் கார்டுதாரர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றில், பிழைகளை சரி செய்த பின், ஸ்மார்ட் கார்டு அச்சிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. 

இது குறித்து, ரேஷன் கடைகளில், மக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டி வைக்குமாறு அறிவுறுத்தி, ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* ஸ்மார்ட் கார்டு வினியோக பணியில், கம்ப்யூட்டர் தொகுப்பில் புகைப்படம் இடம் பெறாத கார்டுதாரரின் விபரம், இந்த ரேஷன் கடை ஊழியரிடம் உள்ளது. 
அந்த பட்டியலில் உள்ள குடும்ப தலைவரின் புகைப்படத்தை, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற மொபைல் ஆப் அல்லது www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் 
* ரேஷன் கார்டுதாரரின் அனைத்து விபரங்களும், ஆங்கிலம் மற்றும் தமிழில், கம்ப்யூட்டர் தொகுப்பில் இடம் 
பெற்றுள்ளதை சரிபார்த்து, உறுதி செய்து கொள்ள வேண்டும். அந்த விபரங்களில், ஏதேனும் விடுபட்டு இருப்பின், மேற்கூறிய இணையதள வசதி மூலம் சரி செய்து கொள்ளலாம் 
* அந்த விபரங்கள் சரி செய்யப்பட்ட பின்பே, ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்க இயலும். இது தொடர்பாக, ரேஷன் கார்டுதாரர், முழு ஒத்துழைப்பை வழங்கி, விரைவில் ஸ்மார்ட் கார்டு பெறும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
மொபைல் ஆப்

இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிழை திருத்தம் செய்ய விரும்புவோர், பொது வினியோக திட்ட இணையதளம் அல்லது மொபைல் ஆப் பயன்படுத்த வேண்டும். அதில், திருத்தம் செய்யும் பகுதிக்கு சென்று, ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை பதிவிட வேண்டும். அந்த எண்ணுக்கு, 'ஒன் டைம் பாஸ்வேர்டு' வரும். அதை செலுத்தி, பிழைகளை சரி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement