Ad Code

Responsive Advertisement

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை...

கிருஷ்ணகிரி: 'தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், வரும் கல்வியாண்டு முதல், கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு பி.எட்., கணினி அறியவில் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்வர்ணராணி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் கதிரவனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகள், வேலையின்றி தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை, வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலம், வேலையில்லா கணினி பி.எட்., ஆசிரியர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைக்கும். சமச்சீர் கல்வியில் கொண்டு வந்த கணினி அறிவியல் பாடத்தை, மீண்டும் நடைமுறைப்படுத்தி, அதற்காக அச்சிடப்பட்ட பாட புத்தகங்களை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கடந்த, 2006ல் இருந்து புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளியில், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளை கொண்டு வந்து, அங்கு கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அரசு மேல்நிலைப்பள்ளியில், காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்ளை, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரப்ப வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது..

நன்றி:தினமலர்


வெ.குமரேசன்
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
© பதிவு எண் : 655/2014

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement