Ad Code

Responsive Advertisement

கல்விக் கடன் பெற எளிய வழி வங்கி அதிகாரி சொல்வதை கேளுங்க

''சரியான திட்டமிடல் மற்றும் உரிய ஆவணங்களுடன் வங்கிகளை அணுகினால் எளிதில் கல்விக் கடன் பெறலாம்,'' என கனரா வங்கி மேலாளர் வணங்காமுடி தெரிவித்தார்.தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சியில் 'கல்விக் கடன்' குறித்து அவர் பேசியதாவது: பிள்ளைகளை படிக்க வைக்க பெற்றோருக்கு ஆசை இருக்கும்; ஆனால், பண வசதி இருக்காது.
பணம் இல்லை என்பதற்காக ஒரு மாணவருக்கு கல்வி தடைபடக் கூடாது என்பதால், வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. படிப்பு, கல்லுாரிகளை முடிவு செய்த பின் கல்விக் கடன் குறித்து யோசித்தால் போதும். அனைத்து வகை படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லுாரி, உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் படிப்பிற்கு 2 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. உள்நாட்டு படிப்புகளுக்கு அதிகபட்சம் 10 லட்ச ரூபாய். வெளிநாட்டில் படிக்க அதிகபட்சம் 20 லட்ச ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. 4 லட்ச ரூபாய் வரை கடனுக்கு உத்தரவாதம் வழங்க தேவையில்லை. மாணவர் குடியிருக்கும் பகுதிக்கு உட்பட்ட வங்கிக் கிளையில் கடன் பெறுவது நல்லது. அந்த வங்கியில் பெற்றோர்-, மாணவர் இணைந்து வங்கிக் கணக்கு துவங்க வேண்டும். முகவரி சான்று, ஆதார் அட்டை அவசியம்.படிப்பு முடிந்து ஓராண்டில் கடனை திருப்பி செலுத்த வேண்டும். வங்கிகளுக்குள் வட்டி விகிதம் மாறுபடும். பத்து ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்த வேண்டும். வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் எளிதில் கடன் பெறலாம்.இந்த ஆண்டு முதல் ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேலான கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு காப்பீடு செய்யப்படுகிறது.இவ்வாறு கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement