Ad Code

Responsive Advertisement

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு


மதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

வரிச்சியூர் அருகே தட்சனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த வாரம் கலெக்டர் நடத்திய ஆய்வில், எட்டாம் வகுப்பு மாணவர்களால் ’மதுரை’, ’ஸ்கூல்’,’டாய்லெட்’, ’சயின்ஸ்’ போன்ற ஆங்கில வார்த்தைகள் கூட பலருக்கு எழுத தெரியவில்லை.ஆறாம் வகுப்பு மாணவர்களால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவின்பேரில், திருமங்கலத்தில் விடைத்தாள் திருத்தும் பணிப் பொறுப்பில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்தையா, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ’மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் தலா ஒரு உதவி மற்றும் கூடுதல் ஏ.இ.ஓ.,க்கள் உள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது மாணவர் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும்.

தொடக்க பள்ளியில் ஆசிரியர் ஈடுபாடுடன் பணியாற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தரமான கல்வி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.ஒரு மாதத்தில் மீண்டும் ஏதாவது பள்ளியில் கலெக்டர் ஆய்வு நடத்தும்போது அப்போதும் கற்றல் திறனில் முன்னேற்றம் இல்லையென்றால் கலெக்டர் நடவடிக்கை பாயும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement