Ad Code

Responsive Advertisement

மதிப்பெண் சான்றுகளைப் பெற தனித்தேர்வர்களுக்கு அழைப்பு

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.துணை இயக்குனர் ஆசீர்வாதம் கூறியுள்ளதாவது: 

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் தனித் தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதும் மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வு எழுதும் மையங்களில் நேரடியாக வழங்கப்படுகிறது. மையங்களில் பெற்று கொள்ளாத சான்றிதழ்கள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிலுவையில் வைக்கப்படும். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மார்ச்/ஏப்ரல் 2009 முதல் செப்.,/அக்., 2013 வரையிலான காலத்திற்குரியவை ஆயிரக்கணக்கில் தனித்தேர்வர்களால் பெறாமல் அலுவலகத்தில் உள்ளன.

விதிகளின்படி தேர்வுமுடிவுகள் வெளியான இரண்டாண்டுகள் கழித்து தேர்வர்களால் கேட்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்பட வேண்டும். எனவே ஒரு மாதத்திற்குள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறாத தனித்தேர்வர்கள் தேர்வு எழுதியதற்குரிய நுழைவுச்சீட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திட்ட கடிதத்துடன் 40 ரூபாய் மதிப்பிலுள்ள அஞ்சல்வில்லை ஒட்டப்பட்ட உறையை இணைத்து பெறலாம், என கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement