Ad Code

Responsive Advertisement

ஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 2,500 பேருக்கு பணி நியமன ஆணை: 21 மாவட்டங்களில் வழங்கப்பட்டது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் அரசு தேர்வுத்துறை இந்த தேர்வை நடத்தியது. இத்தேர்வை ஏறத்தாழ8 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இந்த நிலையில், எழுத்துத்தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களும் அறிந்துகொள்ளும் வகையில் பெயர், பதிவு எண், இட ஒதுக்கீடு வாரியாக இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, “ஒரு காலி யிடத்துக்கு 5 பேர்” என்ற விகிதாச்சாரத்தில் சான்றிதழ் சரி பார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 9, 10, 11 ஆகிய 3 நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அதிகாரிகளால் நடத்தப் பட்டன. சான்றிதழ்சரிபார்ப்பின் போது, அசல் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு உயர் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வு மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில் தெரிவு பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் மதுரை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், ராமநாத புரம், சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, தேனி, திருவாரூர், திருப்பூர், திருச்சி, திருநெல் வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், அரியலூர் ஆகிய 21 மாவட்டங் களில் பணிக்கு தேர்வானோர் பட்டியல் சனிக்கிழமை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் வெளியிடப்பட்டது. வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங் களுக்கு இன்று தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement