Ad Code

Responsive Advertisement

2.42 லட்சம் ரேஷன் கார்டுகள் முடக்கம் 'ஆதார்' பதிய முடியாமல் மக்கள் அவதி


ஆதார் எண் பதியாத, 2.42 லட்சம் ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன; அதனால், உணவு பொருட்கள் வாங்க முடியாமலும், ஆதார் பதிய முடியாமலும், அந்த கார்டுதாரர்கள் அவதிப்படுகின்றனர்.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்பட்டன. தற்போது, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வரும் நிலையில், 2.42 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரின் ஆதார் எண்ணை கூட பதிய வில்லை. இதனால், அவர்களின் கார்டுகளை, உணவுத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

இதுகுறித்து, ஆதார் பதியாதவர்கள் கூறியதாவது: கவனக்குறைவு, வெளியூர் சென்றது, அலட்சி யம் உள்ளிட்ட காரணங்களால், ரேஷனில் ஆதார் எண் பதிவு செய்யவில்லை. அரசும், ஆதார் பதிய கடைசி தேதி இதுதான் என, விளம்பரம் எதுவும் செய்யவில்லை. தற்போது, ஸ்மார்ட்கார்டு வழங்கப்படுவதால், ஆதார் பதிய ரேஷன் கடைக்கு சென்றால், 'உங்கள் கார்டு முடக்கப் பட்டுள்ளது; இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. அதிகாரி களை தொடர்பு கொள்ளவும்' என, ஊழியர்கள் கூறுகின்றனர்.

எனவே, ரேஷனில் தொடர்ந்து பொருட்கள் வாங்க, ஆதார் பதியாமல் முடக்கிய கார்டுகளை, மீண்டும் பதிவு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


சென்னை 'தண்டம்'


தமிழகம் முழுவதும் முடக்கப்பட்ட, 2.42 லட்சம் கார்டுகளில், சென்னையில் மட்டும், 1.07 லட்சம் கார்டுகள் உள்ளன. இதைதொடர்ந்து, காஞ்சி, 43 ஆயிரம்; திருவள்ளூர், 27 ஆயிரம்; குமரி, 11 ஆயிரம்; நெல்லை, 5,000 கார்டுகள் உள்ளன.


யார் காரணம்?


ஆதார் பதிவை துரிதப்படுத்த, காலக்கெடு நிர்ண யித்து, அதை மக்களிடம் முறைப்படி தெரிவிக்க, அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கு, உணவு துறை அமைச்சர் காமராஜ் ஒப்புதல் தரவில்லை. இதனால், கவனகுறை வால், பலர் அலட்சியமாக இருந்துள்ளனர். தற்போது, அவர்களின் கார்டுகளை முடக்கி வைத்து அலைக்கழிக்க, உணவு மற்றும் கூட்டுறவு துறை உயரதிகாரி ஒருவரே காரணம் என, கூறப்படுகிறது.


எத்தனை பேர் (கோடியில்)


மொத்த ரேஷன் கார்டு - 1.89
மொபைல் எண் பதிவு --- 1.75
அனைவரின் ஆதார் பதிவு 1.26
பாதி பேர் ஆதார் பதிவு - 60.62 லட்சம்
ஒரு ஆதார் கூட பதியாதவர்கள் 2.42 லட்சம் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement