Ad Code

Responsive Advertisement

பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்:உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு


பொறியியல் படிப்புக்கு மே 1 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

சென்னை: மே 1-ம் தேதி முதல் பொறியியல் படிப்புக்கு ஆன்னைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்வதற்காக, ஆன்லைனில் மே -1 முதல் 31ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.
மேலும், ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதியும், தரவரிசைப்பட்டியல் ஜூன் 27 ம் தேதியும் வெளியிடப்படும். ஜூன் 27ம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும். பொறியியல் படிப்பு சேர்க்கை தொடர்பான அறிக்கை ஏப்ரல் 30ல் செய்தித்தாளில் வெளியிடப்படும்.  எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement