Ad Code

Responsive Advertisement

பீம் - ஆதார் ஆப் செயல்பாடு: 10 அம்சங்கள்

ஆதார் எண்ணுடன் தொடர்புடைய, கைரேகை பதிவு செய்து பணம் செலுத்தும் 'பீம் - ஆதார் ஆப்' என்ற புதிய வசதியை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்.


இந்த ஆப் தொடர்பான, 10 முக்கிய அம்சங்கள்:

1. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய பீம் ராவ் அம்பேத்கர் பிறந்த நாள் அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய வசதி, நாட்டின் பண பரிமாற்ற நடைமுறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. இந்த வசதி, பயோமெட்ரிக் முறையில் செயல்படுவது. அதாவது, கைரேகையை பதிவு செய்து பண பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.

3. இந்த ஆப் வசதியில், தமிழ், பெங்காலி, குஜராத்தி மலையாளம், ஒடியா, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகள் இடம் பெற்றுள்ளன. தேவையில்லாத முன்பின்தெரியாத பணபரிமாற்ற கோரிக்கைகளை இதன் மூலம் நிறுத்தவும்முடியும்.

4. வணிகர்கள், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐடியூன்கள் வசதிகளில் இருந்து, இந்த ஆப் வசதியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

5. இதன் பிறகு வணிகர்கள், தங்களின் ஆதார் எண்ணை பதிவு செய்து, கைரேகை ஸ்கேனர் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.

6. இதன் பிறகு ஆப் வசதி செயல்பட துவங்கி விடும். அதன் மூலம் பண பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும்.

7. மக்கள் இனிமேல், பொருட்கள் வாங்க செல்லும் போது, டெபிட், கிரெடிட் கார்டு எடுத்து செல்ல தேவையில்லை. தங்களின் ஆதார் எண்ணைபதிவு செய்து, கைரேகையை பதிவு செய்தால் போதுமானது.

8. அதற்கு முன், மக்கள் தங்களின் வங்கி கணக்குடன், ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டும்.

9. இந்த ஆப் வசதிக்கு, மக்களிடம் இணைய தொடர்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் பெறும் போது வணிகர்கள்,

எம்.டி.ஆர்., எனப்படும் வணிகர் தள்ளுபடி கட்டணத்தை வங்கிகளுக்கு செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், புதிய ஆப் வசதியில் எம்.டி.ஆர்., கட்டணம் செலுத்த தேவையில்லை.

10. இந்த புதிய ஆப் வசதியை உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு பரிந்துரை செய்யும் போது, உங்களுக்கு ஒவ்வொரு முறையும், 10 ரூபாய் கிடைக்கும். ஏற்கனவே, இந்த புதிய ஆப் வசதியில், 27 வங்கிகள், 3 லட்சம் வணிகர்கள் இணைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement