Ad Code

Responsive Advertisement

TNPSC அறிவிப்பு:TET தேர்வு காரணமாக செயல் அலுவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி மாற்றம்

செயல் அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து டி.என்.பி. எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு:

  செயல் அலுவலர் நிலை - 3, நிலை - 4 ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு அடுத்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில்நடைபெறவுள்ளது.இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வும் அதே தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விண்ணப்பதாரர்களின்கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி விடுதிக் கண்காணிப்பாளர், உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு மே 20 -இல் நடைபெறும். இதேபோன்று செயல் அலுவலர் நிலை 3 -க்கான தேர்வு ஜூன் 10-லும், நிலை 4-க்கான தேர்வு ஜூன் 11 -லும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement