Ad Code

Responsive Advertisement

TN BUDGET 2017-18 : காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு 10,500 பேர் விரைவில் தேர்வு

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு 10,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று ஜெயக்குமார் அறிவித்தார்.




  தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம் பின்வருமாறு...

காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

நடப்பாண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 29 காவல்நிலையங்கள்

காவல்துறை நவீனமயமாக்க ரூ.6,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வாகனங்களையும், தகவல் தொலைத் தொடர்பு கருவிகளையும் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு.

குற்றவாளிகளை சீர்திருத்தும் அமைப்புகளாக திகழும் சிறைச்சாலைத் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு.

நிதி நிர்வாகத்தக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு.

நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement