ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.
அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவி கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக, டெட் தேர்வு தள்ளிப்போனது.
இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து, ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது.
இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை