Ad Code

Responsive Advertisement

TET PREPARATION ARTICLE : ROAD TO SUCCESS - PRATHEEP GHSS POONGULAM

TET சிறப்பு கட்டுரை :

ஆசிரிய கனவுகளை கண்ணில் சுமந்து உழைப்பில் சேகரித்து வரும் நண்பர்களுக்கு... சிறு கருத்து பகிர்வு...



  * எவ்வளவு நேரம் படிப்பிற்கு செலவிடுகிறோம் என்பதை விட எப்படி செலவிடுகிறோம் என்பதே வெற்றியை நிர்ணையிக்கிறது

* எனது முதல் கருத்தான்மை இணைய மெடிரியல் குவியலோடு மட்டும் பயனிப்பது வெற்று முயற்சி

* தற்போது தாங்கள் செய்ய வேண்டியது புத்தக வாசிப்பு . அதில் புரிதலும் அவசியம்.

* உங்களோடு போட்டியில் இருப்பவர்கள் பல லட்சம்

* எனவே உங்கள் இலக்கு 120 நோக்கி இருக்கட்டும்
எப்படி பெறலாம் ?
முதலில் பாட பகுதியை இரண்டாக பிரியுங்கள்
1. மனப்பாடம் செய்தல்
2. புரிதல் செயல்பாடு
பகுதி 1 ல் தமிழ், அறிவியல், ச.அறிவியல் பாடப்பகுதியை இணைக்கலாம்
பகுதி 2ல் கணிதம், உளவியல், ஆங்கிலம் இணைக்கலாம்

* பகுதி 1 : இதற்கு தாங்கள் செய்ய வேண்டியது வரி மீது விழி வைத்து தெளிவுற படித்தல்

* பகுதி 2 : பாடப்பகுதியை புரிந்து தொடர்புடைய வினாக்களை தேர்வில் கையாளுதல். இதற்கு பயிற்சி வினாக்கள் பலன் தரும்
கணிதம் பொறுத்தவரை 7 மற்றும் 8 வாழ்வியல் கணிதம் தலைப்புகளை சார்ந்த பயிற்சி கணக்குகளை முயற்சித்து கற்கவும்
மேலும் சுய தேர்வு, நினைவு கூர்தல் உக்தி, மனத்திறன், ஆழ்ந்து படித்தல் வெற்றியின் பாதைகள்
120 மதிப்பெண் சாத்தியமாகுமா?

நிச்சயம் சாத்தியம். திட்டமிட்டு பாட நிலைகளுக்கு ஏற்ப படித்தல் வெற்றியை தரும்.ஆங்கிலம், உளவியல் மதிப்பெண் நிர்ணையிக்கும் காரணிகள். எனவே அவற்றில் கவனம் தேவை.மேலும் ஆங்கிலம் தயார் படுத்துதலுக்கு பாட திட்டம் கொண்டு தலைப்பு வாரியாக பாட புத்தகத்தில் தயாரிப்பு செய்யுங்கள்.இங்கு தேவை திட்டமிட்ட முயற்சியே.

தோழர்கள் கனவு மெய்பட வாழ்த்துகளுடன்

 - பிரதீப் ப.ஆ . _ வேலூர் (பூங்குளம்)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement