Ad Code

Responsive Advertisement

'TET' தேர்வு மதிப்பெண் பட்டியல் இன்று வெளியீடு.காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம்.

டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன.
தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, 'டெட்' தேர்வு முடித்தோர், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர்.

  அவர்களின் எதிர்பார்ப்பைநிறைவேற்றும் வகையில், 'காலியாக உள்ள, 1,111 ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது.

அதற்கேற்ற வகையில், ஏற்கனவே, 'டெட்' தேர்வு முடித்தோரின் மதிப்பெண் பட்டியலுடன், சுய விபரங்கள், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின்றன.

தேர்வர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement