Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வு நேரத்தில் விளையாட்டு ரூ. பல லட்சம் வீணடிப்பு

தமிழகத்தில் பொதுத் தேர்வு நடந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் நேற்று நடந்த மாதாந்திர விளையாட்டு போட்டிகளில் 90 சதவீதம் பேர் வராததால் மைதானங்கள் வெறிச்சோடின. பல லட்சம் ரூபாய்  வீணடிக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். உடல் நலம் பாதிப்பால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடத்தவில்லை.


பல லட்சம் வீணடிப்பு
அவசர கோலமாக மாநில அளவில் மாவட்டம் தோறும் தடகளம், நீச்சல், கடற்கரை வாலிபால், கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. முதல், இரண்டாமிடம் பெறுபவருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்குவதாக அறிவித்தனர்.

பொதுத் தேர்வு நடப்பதால் பள்ளி மாணவ, மாணவியர் யாரும் பங்கேற்க வில்லை. விளையாட்டு ஆர்வலர்களும் 'ஆப்சென்ட்' ஆகினர். 'கடமை'யே என சிலரை வைத்து ஒப்புக்கு சப்பாணியாய் போட்டிகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விளையாட்டு போட்டிகள் நடத்திய வகையில் பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாகியது தான் மிச்சம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement