Ad Code

Responsive Advertisement

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.தமிழக அரசின் வருவாய், பல வகைகளில் குறைந்துள்ளதால், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, நிதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசின் கடனும், ஆண்டுதோறும் அதிகரித்தபடி உள்ளது. கடனுக்கான வட்டித் தொகையும், அதிகரித்து வருகிறது. இவற்றை சமாளித்து, புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

எனவே, இம்முறையும் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா அல்லது புதிய வரிகள் விதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட், இன்று காலை, 10:30 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

புதிய முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்ற பின், முதன் முறையாக, இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோல், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாருக்கும், இதுவே முதல் பட்ஜெட்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement