Ad Code

Responsive Advertisement

பொதுத்தேர்வுகள் தொடக்கம்: இனி மின்தடை கிடையாது


பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதைத் தொடர்ந்து, மின் தடை இருக்காது என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சார வாரியத்தில் துணை மின் நிலையங்கள், மின்பாதைகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்குவதற்கான மாதாந்திரப் பராமரிப்புக்கு, குறிப்பிட்ட பகுதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 2 அல்லது மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட மின்தடை ஏற்படும்.இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வியாழக்கிழமையும் (மார்ச் 2), பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8-ஆம் தேதியும், சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தேர்வு மார்ச் 9-ஆம் தேதியும் தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நீடிக்கின்றன.இதையடுத்து, பொதுத்தேர்வின் காரணமாக, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் வகையிலும், தேர்வு எழுதுவதற்கு இடையூறு ஏற்படாத வகையிலும் மின் விநியோகம் தடை செய்யப்படாது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறியது: பொதுத் தேர்வுகள் நிறைவடையும் வரை மாதாந்திரபராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான அறிவிக்கப்பட்டமின்தடைகள் கிடையாது. தேர்வு சமயத்தில் ஏதேனும் பழுதுஏற்பட்டு மின்தடை ஏற்பட்டால் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும். தேர்வுகள் நிறைவடைந்ததும் மீண்டும் வழக்கம் போல் மின் தடை அமல்படுத்தப்படும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement