Ad Code

Responsive Advertisement

தேர்வுத் துறையின் சமீபத்திய அறிவிப்பை மறந்து விடாதீர்கள்,மாணவமணிகளே !!!

தமிழகத்தில் பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாளில் எழுதிய விடைமுழுவதையும் அடித்தால் ஓராண்டுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு துறை அறிவித்துள்ளது.


  தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச்4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இதேபோல எஸ்எஸ்எல்சி தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த தேர்வுகளை எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வித் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.தேர்வுகளின் போது மாணவர்கள் சிலர் தாங்கள் எழுதிய விடைத்தாளின் முழு விடையையும் அடித்து விடுகின்றனர். அவ்வாறு செய்யும் மாணவர்கள் அடுத்த இரு பருவங்களுக்கு (ஓராண்டு) தேர்வுகளை எழுதுவதற்கு தடை விதிக்கப்படும்.மேலும், விடைத்தாள் வழங்கப்படும் போதுமாணவர்கள் பக்க எண்ணிக்கையை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ள வேண்டும். தனது முகப்புச்சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

விடைத்தாளின் எந்தப் பகுதியிலும் தனது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ குறிப்பிடக் கூடாது.சில விடைகளை கோடிட்டு அடிக்க நேர்ந்தால், "மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது" என்ற குறிப்பை பேனாவினால் எழுத வேண்டும். ஆனால், கையொப்பம் இடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.எனவே விடைத்தாளில் கூடுமான வரை அடித்தல், திருத்தல்கள் இன்றி தெளிவான முறையில் விடைகளை எழுதப் பழகுங்கள். தேர்வுத் துறை விதித்திருக்கும் நிபந்தனைகளை மீறாமல் தேர்வு எழுத உறுதி கொள்ளுங்கள்.குறிப்பிட்ட தேர்வுகளை எழுதி முடித்ததும், கடைசியில் 10 நிமிடங்கள் ஒதுக்கி விடைத்தாளை சரி பார்க்க மறக்கக்கூடாது. விடுபட்டவை ஏதேனும் இருந்தாலோ அல்லது தவறான விடைகளோ அப்போது கண்ணில் படலாம். அதனால் ஒவ்வொரு தேர்வு முடிவிலும் விடைத்தாளை சரி பார்க்க மறக்கக் கூடாது.

கடைசியாக ஒரு வார்த்தை; நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் இன்னமும் ஒரு தெளிவான நிலைப்பாடு எடுக்கப் படவில்லை என்பதால். அதில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. எனவே பொது  மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்கும் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் அதற்கு விண்ணப்பிக்க மறவாதீர்கள்.பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் ஆண்டு தோறும் தமிழக மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த ஆண்டும் நமது மாணவர்கள் மதிப்பெண்களில் சாதனை படைப்பார்கள் என்பது உறுதி!மாணவமணிகள் மீதான மாறாத நம்பிக்கையுடன் நாளை பிளஸ் டூதேர்வு எழுதப் போகும் அனைத்து மாணவர்களுக்கும் தினமணி.காமின் அன்பான வாழ்த்துகள்!முயற்சியும், கடின உழைப்பும் என்றும் வெல்க!

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement