Ad Code

Responsive Advertisement

'நீட்' தேர்வு விண்ணப்பத்தை ஏற்க மனு : மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு.

மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தை ஏற்கும்படி, மத்திய அரசு மற்றும் தகுதி தேர்வின் இயக்குனருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், புல்லகவுண்டம்பட்டி அருகில் உள்ள சீரங்க கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தேசியன் சார்பில், அவரது தந்தை பாரி என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன், ௨௦௧௫ல் நடந்த, 10ம் வகுப்பு தேர்வில், ௪௭௮ மதிப்பெண்கள் பெற்றான். தற்போது, பிளஸ் ௨ தேர்வு எழுதி வருகிறான். மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரி உள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இன்னும், ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், மே, ௭ம் தேதி, நீட் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச், 1க்குள் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. மாநில அரசு, நீட் தேர்வுக்கான விலக்கு பெற நடவடிக்கை எடுத்து வருவதால், என் மகன் விண்ணப்பிக்கவில்லை. தற்போது, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளார். கால தாமதமாக அனுப்பும் விண்ணப்பத்தை ஏற்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.கோவிந்தராமன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் மதனகோபால் ராவ், மாநில சுகாதார துறை சார்பில், கூடுதல் பிளீடர் சஞ்சய்காந்தி, 'நோட்டீஸ்' பெற்றார்.மருத்துவ கவுன்சில், தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு இயக்குனருக்கு தனிப்பட்ட முறையில், நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement