Ad Code

Responsive Advertisement

பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேறியது.

இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும்பெண்களுக்கு12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகைசெய்யப்பட்டு உள்ளது. இந்தகால அளவை 26 வாரங்களாகஉயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.


  இதற்காக மேற்படிசட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுஉள்ளது.இதற்கு வகை செய்யும் ‘மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016’,கடந்த ஆண்டு டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டுநிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்றுபாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதை தாக்கல் செய்த மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா, பெண்களின் பேறுகால விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக (2 குழந்தைகளுக்கு) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். 10 மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று கூறிய மந்திரி, இதன் மூலம் சுமார் 18 லட்சம் பெண் பணியாளர்கள் பயன்பெறுவர்என்றும் தெரிவித்தார்.

இந்த மசோதா உறுப்பினர்களின் ஆதரவோடு பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement