Ad Code

Responsive Advertisement

பணிக்கொடை: திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை (கிராஜுவிட்டி) பெறுவதற்கு வழிவகை செய்யும் வரைவு திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



மத்திய அமைச்சரவைக்கூட்டம்
தில்லியில் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பணிக்கொடை செலுத்தகைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின் ரூ.20 லட்சம் வரை வரிப் பிடித்தம் இல்லாமல் பணிக்கொடை பெறுவதற்கு வழிவகை பிறக்கும்.
முன்னதாக, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்துடன் கடந்த மாதம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இந்தத் திட்டத்தை மத்திய தொழிற்சங்கங்கள் ஒப்புக் கொண்டன.
எனினும், மேற்கண்ட பணிக்கொடையை வழங்க வேண்டுமானால் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 10 தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தது 5 ஆண்டுகளாவது தொழிலாளர் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை பணிக்கொடை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரின.
மேலும், வரிப்பிடித்தம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை பணிக்கொடை பெறலாம் என்ற ஷரத்தானது கடந்த ஆண்டு (2016) ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement