தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பில்15,711 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஜன.23ல் அறிவிக்கப்பட்டது.
இதன்படி சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைக்காவலர் உள்ளிட்டவற்றில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்து, உடல்தகுதி, உடற்திறன் ஆகிய தேர்வின் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும்.எழுத்துத்தேர்வில் 80 மதிப்பெண், உடற்திறன் தேர்வில் 15 மதிப்பெண், என்சிசி, என்எஸ்எஸ், விளையாட்டு சான்றிதழ்களுக்காக 5 மதிப்பெண் வழங்கப்படும். எழுத்துத்தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண் பெற வேண்டும். இருப்பினும் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு பணிக்கு 5 பேர் என்ற விகிதத்தில், அடுத்தக்கட்ட தேர்வான உடல்கூறு அளத்தல், உடல்தகுதி, உடல்திறன் ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவர். இறுதியில் மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், பதவி விருப்ப முன்னுரிமை, வகுப்புவாரியான விகிதாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால், வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன்பின் மருத்துவ பரிசோதனை,தேர்வர்களின் குணநலன்கள், பழக்கவழக்கங்கள், காவல்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்படுவர் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் தெரிவித்துள்ளது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை