Ad Code

Responsive Advertisement

சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச தொகை ஸ்டேட் வங்கியில் ரூ.5,000 ஆக உயர்வு


பாரத ஸ்டேட் வங்கியில், சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காவிட்டால், 50 - 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, 'ஏப்., 1 முதல், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேணாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும்' எனக் கூறியுள்ளது.


  இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட அறிக்கை விபரம்:சேமிப்பு கணக்கு வைத்திருப்போர், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பேண வேண்டும். பெருநகரங்களில் இருப்போர், தங்கள் சேமிப்புக் கணக்குகளில், 5,000 ரூபாய், பகுதியளவு நகரமயமான பகுதிகளில், 3,000 ரூபாய், கிராமப் பகுதிகளில், 1,000 ரூபாய், குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு பேணாத வாடிக்கையாளர்களிடம், 50 முதல் 100 ரூபாய் வரை, அபராதமாக வசூலிக்கப்படும். வரும், ஏப்., 1 முதல், இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது.
பெருநகரங்களில், வங்கிக் கணக்கில் பேணப்பட வேண்டிய இருப்புத் தொகைக்கும், தற்போது கணக்கில் உள்ள தொகைக்கும், 50 சதவீத வித்தியாசம் இருந்தால், 50 ரூபாய் அபராதமும், அதற்கான சேவை வரியும் வசூலிக்கப்படும்; 70 சதவீத வித்தியாசம் இருந்தால், 75 ரூபாய் அபராதம் மற்றும் சேவை வரி பெறப்படும். அதற்கு மேல் வித்தியாசம் இருந்தால், 100 ரூபாய் அபராதமும் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

நகர்ப்புறங்களில், 40 முதல் 80 ரூபாயும், பகுதியளவு நகர்ப் பகுதிகளில், 25 முதல் 75 ரூபாயும், கிராமப் புறங்களில், 20 முதல் 50 ரூபாயும் அபராதமாக பெற
திட்டமிடப்பட்டு உள்ளது.ஒரு மாதத்தில், மூன்று முறைக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களிடம், 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது; அது, இனியும்
தொடரும். காசோலை புத்தகம் வழங்குதல், பணம் செலுத்துதலை நிறுத்துதல் போன்ற சேவைகளுக்கு கட்டணம் பெறப்படும்.

டெபிட் கார்டுகளுக்கு பராமரிப்பு கட்டணமாக, ஆண்டுக்கு, 125 முதல், 300 ரூபாய் வரை வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., பரிவர்த்தனைகள், மாதத்திற்கு, பெருநகரங்களில் மூன்று முறையும், பிற பகுதிகளில் ஐந்து முறையும் இலவசமாக அனுமதிக்கப்படும்.

இவ்வாறு பாரத ஸ்டேட் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கி, சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும் என்ற விதியை, 2012ல் நீக்கியது. தற்போது மீண்டும் அந்த விதி அமல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் வசூலிக்கப்படும் தொகை, பாரத ஸ்டேட் வங்கியில், 25 கோடி சேமிப்புக் கணக்குகளை பராமரிக்க தேவைப்படும் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும் என, வங்கி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement