Ad Code

Responsive Advertisement

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை

தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக 2 ஆண்டுகள் (58 வயதில் இருந்து 60 வயது ஆக) பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.


இது குறித்து தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தலைவர் கே.சந்திரசேகரன் கூறி இருப்பதாவது பஞ்சாப்,ஹிமாசல பிரதேசம்,மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பணி ஓய்வு பெறும் நாளில் இருந்து சிறப்புச் சலுகையாக அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க சட்டம் இயற்றி செயல்படுத்தி வருகின்றது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி செயல்பட்டு வரும் தமிழகஅரசும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி கௌரவிக்க வேண்டுகிறோம். எங்களது இந்த நீண்ட கால கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement