Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2க்கு பின் என்ன படிக்கலாம் - மதுரையில் தினமலர் 'வழிகாட்டி' நிகழ்ச்சி நாளை துவங்குகிறது.


பிளஸ் 2க்கு பின் மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்பது குறித்து 'தினமலர்', சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில் 'வழிகாட்டி' நிகழ்ச்சி மதுரையில் நாளை (மார்ச் 31) துவங்கி ஏப்.,2 வரை நடக்கிறது.
பிளஸ் 2 விற்கு பின் என்ன படித்தால் சிறந்த எதிர்காலம் உள்ளது என்பது குறித்த, 'வழிகாட்டி' என்ற கல்வி மற்றும் வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்வு, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நாளை காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. ஏப்.,2 வரை தினமும் காலை 10:00 முதல்மாலை 6:30 மணி வரை, கல்வி நிறுவனங்களின் ஸ்டால்களை மாணவர், பெற்றோர் பார்வையிடலாம். முன்னணி பல்கலைகள் உள்ளிட்ட 93 கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறுகின்றன. விண்ணப்பம் முதல் மாணவர் சேர்க்கை வரையிலான ஆலோசனைகள் அங்கு அளிக்கப்படும்.தற்கால சூழலுக்கு ஏற்ற படிப்புகள், எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு தரும் பயனுள்ள படிப்புகள் குறித்து, கல்வி வல்லுநர்கள் அரிய ஆலோசனைகள் அளிக்கும் கருத்தரங்குகள் தினமும் காலை, மாலையில் நடக்கிறது.

 பொறியியல், கலை மற்றும் அறிவியல் துறை நிபுணர்களின் குழு விவாதமும் நடக்கிறது.கருத்தரங்கில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும், மாணவர்களுக்கு 'டேப்ெலட்' மற்றும் 'வாட்ச்' பரிசுகளாக வழங்கப்படும். எந்த கல்லுாரியில் என்னென்ன படிப்புகள் உள்ளன? என்பது குறித்த முழுமையான 'வழிகாட்டி புத்தகம்' இலவசமாக வழங்கப்படும்.அனுமதி இலவசம்.

'பவர்டு பை': கலசலிங்கம் பல்கலை, ஸ்ரீராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ்.

இணைந்து வழங்குபவர்கள்: கே.எம்.சி.எச்.,அண்டு டாக்டர் என்.ஜி.பி.,இன்ஸ்டிடியூஷன்ஸ், நேரு குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்லானஜி

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement