Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வால் ரூபெல்லா தடுப்பூசிக்கு சிக்கல்

தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு துவங்கியுள்ள நிலையில், பள்ளிகளில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் ரூபெல்லா மற்றும் தட்டம்மை தடுப்பூசி ஒன்று முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு பல பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுத்தனர்.இது குறித்து அரசு விளக்கம் தந்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.கிராம புற பள்ளிகளில் இன்னும் பல குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படாததால், மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் விடுபட்ட பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் தேர்வால் சிக்கல் : தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. மார்ச் 8ல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்க உள்ளன. இதனால் தேர்வு மையம் உள்ள பள்ளிகளில் காலையில் மாணவர்கள் நுழைய முடியாது. பகல் 2 மணிக்குத்தான் மாணவர்கள் வருவார்கள். தேர்வு நடக்கும் பள்ளிகளில் சுகாதாரத்துறையினரும் நுழைந்து தடுப்பூசி வழங்க முடியாது. இந்த சிக்கலால் சுகாதாரத்துறையினர் திணறி வருகின்றனர்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளால் பள்ளிகளில் முழு ஒத்துழைப்பு கிடைக்காது. இந்நிலையில் மார்ச் 14 வரை இந்த திட்டத்தை நீட்டித்தும் பயனில்லை. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளோம், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement