Ad Code

Responsive Advertisement

தமிழகத்தில் ஏப்., 2ல் போலியோ முகாம்

ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தால் தள்ளி வைக்கப்பட்ட, போலியோ சொட்டு மருந்து முகாம், ஏப்., 2ல் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும், போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஜன., - பிப்., மாதங்களில், சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும்.
தமிழகத்தில், தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடப்படுவதால், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்., 2ல், முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: தமிழகத்தில், போலியோ சொட்டு மருந்துக்கான முதல் தவணை முகாம், ஏப்., 2ல் நடத்தப்படும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், மருத்துவ மனைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உட்பட, 43 ஆயிரம் மையங்களில், இந்த முகாம் நடத்தப்படும். ஐந்து வயதுக்கு உட்பட்ட, 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படும். இதில், தன்னார்வலர்கள் உட்பட, இரண்டு லட்சம் பேர் பங்கேற்பர். இரண்டாம் கட்ட தவணை முகாம், ஏப்., 30ல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement