Ad Code

Responsive Advertisement

ஏப்.25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்:தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர்கள் முடிவு.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, ஏப்., 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.


  இதன் மாநில அமைப்பாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். இதற்காக வல்லுநர் குழுவையும் அமைத்தார். ஆனால் இக்குழு அறிக்கை வழங்குவதில் கால தாமதமாகிறது. எனவே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். மேலும் 1.1.2016 முதல் இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை சம்பளத்தை ஒழித்து, வரையறுக்கப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.தொகுப்பூதியம், மதிப்பூதியம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறையில் அனைத்து துறைகளில் நடக்கும் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும்.

 காலி பணியிடங்களில் காலமுறை சம்பளத்தில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு, 41 மாத பணிக்காலத்தை அறிவிக்க வேண்டும். நீண்ட காலமாக வலியுறுத்தப்படும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15 மாவட்ட தலைநகரங்களில் பேரணி, ஏப்., 8 ல் மாவட்டங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, ஏப்., 15 ல் திருச்சியில் மாநில அளவில் வேலை நிறுத்த மாநாடு, 25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும். 64 துறைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் ஈடுபடுகின்றனர், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement