Ad Code

Responsive Advertisement

ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று (24.03.2017) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வினை சுமார் 8 லட்சம் பேர் எழுதுதினார்கள். இதில் ஒரு காலிஇடத்திற்கு 5 பேர் என்றவிகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் கணக்கிடப்படாவிட்டால்முறைகேடுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும் என்பதினால் எழுத்துத் தேர்வினை எழுதிய சதீஷ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன் கடைநிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வு தேவையில்லை. எழுத்துத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம்.

தேவைப்பட்டால் நேர்முகத் தேர்வு நடத்தலாம். அதில் வரும் மார்க் இரண்டையும் சேர்த்து மொத்தமாகக் கணக்கிட்டு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பல நாட்களாக ரிசல்ட் எப்ப வரும் என்று தேர்வு எழுதியவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் டி.பி.ஐ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கே.ஏ. செங்கோட்டையன் ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இன்று (24.03.2017) ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்விற்காக முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம். dge.tn.gov.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் சென்றுப் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement