Ad Code

Responsive Advertisement

தமிழக பட்ஜெட் 2017-18: முக்கிய செய்திகள் உடனுக்குடன்


தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

  நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் இங்கே உடனுக்குடன்....

காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

நடப்பாண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 29 காவல்நிலையங்கள்
காவல்துறை நவீனமயமாக்க ரூ.6,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் வாகனங்களையும், தகவல் தொலைத் தொடர்பு கருவிகளையும் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு.

குற்றவாளிகளை சீர்திருத்தும் அமைப்புகளாக திகழும் சிறைச்சாலைத் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு.

நிதி நிர்வாகத்தக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு.

நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

****

நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.272.12 கோடி ஒதுக்கீடு.

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

கோவை, மதுரை, திருச்சியில் இந்திய பன்னாட்டு திறன்பயிற்சி மையங்கள் திறக்கப்படும்.

கால்நடை பராமரிப்புக்காக ரூ.1,161 கோடி ஒதுக்கீடு.

அயல்நாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு திறன் பயிற்சி மையங்கள் உதவி புரியும்.

பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாக்க தமிழர் கலாசார பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.

பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய ஜெயக்குமார், சம்பளம், கல்விக்கான மானியமாக ரூ.46,331 கோடி ஒதுக்கீடு.

 விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.7 ஆயிரம் கடனாக வழங்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்காக சமச்சீர் நிதியம் உருவாக்கப்படும். மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தினை மாநில அரசே ஏற்கும். •••• நிதிநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக உள்ளது. தமிழக அரசின் கடன் சுமை மார்ச் மாதம் 2018ம் ஆண்டில் 3,14,366 கோடியாக இருக்கும்.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.41,977 கோடியாக இருக்கும். நிதிநிலை அறிக்கையில் மொத்த வருவாய் செலவு ரூ.1,59,363 கோடியாகும்.

பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement