Ad Code

Responsive Advertisement

2% D.A announced for Central Govt Employees

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்க
மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

மேலும் ஐ.ஐ.டி. சட்ட திருத்த மசோதாவிற்கும் கூட்டத்தில் ஓப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை தனியார் பங்களிப்புடன் ஐ.ஐ.டி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயா அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement