Ad Code

Responsive Advertisement

+2 வேதியியல் தேர்வு 'ஈசி' : பிளஸ் 2வில் 'சென்டம்' கூடும்

பிளஸ் 2, வேதியியல், கணித பதிவியல் வினாத்தாள்கள், 'ஈசி'யாக இருந்ததால், 'சென்டம்' அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், மொழிப்பாடத் தேர்வுகள் முடிந்து, நேற்று முக்கிய பாடத் தேர்வுகள் தொடங்கின.


  அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. மூன்று ஆண்டுகளாக, வேதியியல் தேர்வில் கடினமான வினாக்கள், வினாத்தாளில் பிழைகள் இருந்தன.அதனால், போனஸ் மதிப்பெண் அளிக்கும் நிலை ஏற்பட்டது.அதனால், நேற்றைய வேதியியல் தேர்வு குழப்பமாக, கடினமாக இருக்குமோ என, மாணவர்கள் அச்சத்தில் இருந்தனர். ஆனால், வினாத்தாளில், மிக எளிமையான கேள்விகள், இடம் பெற்றிருந்தன. பெரும்பாலான கேள்விகள், பாடங்களின் பின்பக்க தொகுப்பில் உள்ள கேள்விகளில் இருந்தும், முந்தைய ஆண்டு தேர்வுகளில் பலமுறை இடம் பெற்றவையாகவும் இருந்தன.இதுகுறித்து, மாணவர்களும், ஆசிரியர்களும் கூறுகையில், 'வேதியியல் தேர்வு, இவ்வளவு எளிதாக இருக்கும் என, நினைக்கவில்லை. வேதியியலில், இந்த ஆண்டு, 'சென்டம்' அதிகரிக்கும்' என்றனர்.

அதேபோல, வணிகவியல் பிரிவு மாணவர்களுக்கு, கணித பதிவியல் என்ற, 'அக்கவுன்டன்சி' தேர்வு நடந்தது. கணக்கீடுகள் குழப்பமின்றி, கேள்வித்தாள் எளிமையாக இருந்து உள்ளது.இதுகுறித்து, சென்னை சவுகார்பேட்டை, எம்.பி.யூ., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கூறுகையில், ''கணித பதிவியலில் இது போன்று எளிமையான கேள்வித்தாள் வடிவமைப்பது கடினம். அரசு பள்ளிகளின், சராசரி மாணவர்களும் நல்ல மதிப்பெண் பெறலாம்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement