Ad Code

Responsive Advertisement

ஓய்வூதிய திட்ட நிபுணர் கமிட்டி: 19 நாள் ஆயுளுக்கு அரசாணை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பான நிபுணர் கமிட்டிக்கு, 19 நாட்கள் மட்டுமே அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.


  மத்திய அரசு பரிந்துரைப்படி, தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான, சி.பி.எஸ்., திட்டம், 2003ல் அறிமுகமானது. இதில், 2003க்கு பின், பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர்.இந்தத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் கொண்டு வரக்கோரி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய, 2016 மார்ச்சில் நிபுணர் கமிட்டியை தமிழக அரசு நியமித்தது. பின், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, கமிட்டியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அப்படி நீட்டிக்கப்பட்ட கமிட்டியின் பதவிக்காலம், ௨௦௧௬ டிசம்பர், 25ல் முடிந்தது.

அதன்பின், இரண்டு மாதங்களாக எந்த பணியும் நடைபெறவில்லை. அத்துடன், கமிட்டியின் தலைவராக இருந்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர், பிப்., 7ல் பதவி விலகினார். இந்நிலையில், கமிட்டி யின் பதவி காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, மார்ச், 6ல் தமிழக அரசு உத்தரவிட்டது. கமிட்டியின் பதவிக்காலம், மார்ச், 25ல்முடிவடைய உள்ள நிலையில், 19 நாள் ஆயுளுக்காக ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இடையில், 70 நாட்கள் வரைவீணாகி உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஒவ்வொரு முறையும், நிபுணர் கமிட்டியின் பதவி காலம் தாமதமாக நீட்டிக்கப்படுகிறது. அதனால், எந்த முன்னேற்ற மும் ஏற்பட்டதில்லை. தொடர்ந்து வழங்கப்படும் கால நீட்டிப்பு, ஆசிரியர்களின் நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement