
இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான
வோடஃபோன் அதிவேக திறன் கொண்ட 4G சேவைகளை பல்வேறு நகரங்களில் வழங்கி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட‘வோடஃபோன் சூப்பர்நெட் 4G’ சேவை கோவை, திருப்பூரை தொடர்ந்து சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்மூலம் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 2100 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் திறன் கொண்டு வோடஃபோன் சூப்பர்நெட் 4G சேவையை பயன்படுத்த முடியும். இதன்மூலம் வோடஃபோன் வாடிக்கையாளர்கள் அதிவேகமான இணைய சேவையை பெற முடியும்.வாடிக்கையாளர்கள் புதிய 4G சிம் கார்டுகளுக்கு அப்கிரேடு செய்து அதிவேக 4G இண்டர்நெட் பெறுவதோடு அனைத்து அப்கிரேடுகளுக்கும் 2GB அளவு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆப்ஸ் மற்றும் வீடியோக்களை இலவசமாக டவுன்லோடு செய்யலாம். இதனால் சென்னையில் உள்ள வோடஃபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோவாவிலும் 4G சேவை அறிமுகம் செய்யப்படுகிறது. கோவா மாநில நெட்வொர்க் சந்தையில் 50 சதவிகித பங்குகளை வைத்துள்ள வோடஃபோன், மொத்தம் 8.7 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை