Ad Code

Responsive Advertisement

TNTET-தேர்வர்கள் குழப்பத்தில்.......

TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. பிப்ரவரி 2வது வாரத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கும். 

விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50. விண்ணப்பிக்க கடைசி தேதி 28.2.2017.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும் இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் வீடியோகான்பரன்சிங்' மூலம் 03.02.2017 நடைபெற உள்ளது. சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் பிப்.,3 ல்  நடக்க இருந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென   ரத்து செய்யப்பட்டது.இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும், "ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிப்.,20 முதல் இதற்கான விண்ணப்பங்களை வழங்க டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்த சென்னையில், பிப்.,3ல் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டத்திற்கு டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. 

ஆனால், 'தற்போது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடந்து வருவதால் மாவட்டத்தில் இருந்து யாரும் சென்னையில் டி.ஆர்.பி., கூட்டத்திற்கு செல்லக் கூடாது,' என சி.இ.ஓ.,க்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்துள்ளது. இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மாவட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் செயலர், இயக்குனர் (புரொட்டாகால்) வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் டி.ஆர்.பி.,யின் உத்தரவுகள் நேரடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. 

இதையடுத்து 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது, என்றனர். டி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள் நடக்கின்றன.இதில் பங்கேற்க 60 ஆயிரத்திற்கும் மேல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் டி.இ.டி., 2ம் தாள் தேர்வுக்கு பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப்., கடைசி வாரத்தில் அப்போது பி.எட்., செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Post a Comment

1 Comments

  1. computer science eligibla to TET exam plz rly sir

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement