Ad Code

Responsive Advertisement

Flash News:போர்க்களமான தமிழக சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைப்பு



சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். கால அவகாசம் தந்து வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.
மேலும்
சட்டப்பேரவையில் நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் எதிர்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

மைக்குககள் பிடுங்கப்பட்டதால் சட்டப்பேரவை போர்க்களமானது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபாநாயகர் பேரவையை விட்டு வெளியேறினார். இதனால் தமிழக சட்டப்பேரவை 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் தனபால் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.

தம்முடைய முடிவில் மற்றவர்கள் தலையிட தனபால் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள் சபாநாயகர் நடுநிலையுடன் செயல்பட எதிரணி வலியுறுத்தினர். எவ்வாறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது சபாநாயகரின் உரிமை என்று தனபால் தெரிவித்துள்ளார். மேலும் வெளியே நடந்ததை பேரவைக்குள் பேசக்கூடாது என்று சபாநாயகர் தெரிவித்தார். அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு தரப்படும் என்று சபாநாயகர் தனபால் உறுதி அளித்தார்.

வேறொரு நாளில் வாக்கெடுப்பு நடத்த எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மக்களிடம் கருத்து கேட்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சட்டப்பேரவையில் ஒரு மணி நேரமாக கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது. கூச்சல், குழப்பத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்னும் தொடங்கவில்லை. பேரவையில் அமைதி ஏற்பட்டால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement