
ஸ்மார்ட்' ரேஷன் கார்டின் வடிவத்தை இறுதி செய்ய, தமிழக அரசின் ஒப்புதலுக்காக, உணவுத் துறை காத்திருக்கிறது.
தமிழக அரசு, தற்போது புழக்கத்தில் உள்ள, காகித ரேஷன் கார்டுக்கு பதிலாக, ஏப்ரல் முதல், ஸ்மார்டு கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்பட்டு வருகின்றன. ஏப்., முதல், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும். ஆனால், அதன் வடிவத்துக்கு, இதுவரை அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இது குறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கையடக்க வடிவில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படுவது உறுதி. அதில், குடும்ப தலைவரின் புகைப்படம், முகவரி என, இடம் பெற வேண்டிய விபரங்கள் குறித்து, உணவுத் துறை செயலகம் வழியாக, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதுவரை, அனுமதி கிடைக்கவில்லை. ஒப்புதல் கிடைத்ததும், அதற்கான மென்பொருள் விரைவாக தயாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை