
நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் பெற, மார்ச் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.
இது குறித்து, ஆர்.டி.ஓ., அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள,
சாலை போக்குவரத்து சார்ந்த தகவல்களை, ஒரே இடத்தில் குவித்து, அவற்றை அனைத்து இடங்களிலும் பார்க்கும் வகையில் வெளிப்படை தன்மையை கடைபிடிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி தற்போது, 'பரிவாகன்' என்ற மென்பொருளை, ஆர்.டி.ஓ., அலுவலகங்களுக்கு வழங்கி உள்ளது. அதற்கு வரும் தகவல்கள், டில்லியில் உள்ள சர்வரில் சேமித்து வைக்கப்படும். இதை, அனைத்து, ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும் பார்க்கலாம்.
இது, செயல்பாட்டுக்கு வந்ததும், அனைவரும், 'ஆன்லைன்' மூலம் மட்டுமே ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அதே நேரம், ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணம், கோப்பு இருக்கும் இடம் என, அனைத்தையும்
மனுதாரர் அறிய முடியும். இந்த நடைமுறை, மார்ச்சில் அமலுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை