Ad Code

Responsive Advertisement

வாக்காளர் பட்டியல் திருத்த பணி துவக்கம்...

'தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி நடத்தப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப் பணி, 2016 அக்டோபரில் நடந்தது. அப்போது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி, சட்டசபை தொகுதிகளில் மட்டும், திருத்தப் பணி நடைபெறவில்லை. இந்தத் தொகுதிகளில் மட்டும், பிப்., 20ல், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விரும்புவோர், அன்று முதல், மார்ச், 6 வரை விண்ணப்பிக்கலாம்.

பிப்., 25ல், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்படும். பிப்., 26 மற்றும் மார்ச், 5ல், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல், மார்ச், 16ல் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement