Ad Code

Responsive Advertisement

அஞ்சலகங்களில் சீருடைப் பணியாளர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விற்பனை!!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுக்கான விண்ணப்பங்கள்
தருமபுரி மாவட்டத்திலுள்ளதலைமை அஞ்சலகம், பாலக்கோடு, அரூர், பென்னாகரம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி அஞ்சலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டக் கண்காணிப்பாளர் ஆ. சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
விண்ணப்பக் கட்டணங்களும் அஞ்சலகங்களில் பெறப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் சென்றடைவதற்கான கடைசித் தேதி பிப். 22. விண்ணப்பத்துக்கான விலை ரூ. 30.விண்ணப்பிக்க விரும்புவோர் அருகிலுள்ள அஞ்சல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்கள் உரிய நேரத்தில் சென்றடைய விரைவு அஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம்.

இதற்காக தலைமை அஞ்சலகம், ஆட்சியரம், அன்னசாகரம், வெண்ணாம்பட்டி, குமாரசாமிப்பேட்டை, ரயில் நிலையம், தருமபுரி தெற்கு ஆகிய அஞ்சலகங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement