Ad Code

Responsive Advertisement

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்த கோரிக்கை.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பலர் ஓய்வு பெற்று உள்ளனர்.அந்த பணியிடங்களை நிரப்பாததால் 1,060 பணியிடங்கள்காலியாக இருந்தன. 

இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர்களைதேர்வு செய்து தருமாறு பள்ளி கல்வித்துறை இயக்குனர்ச.கண்ணப்பன் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடந்த வருடம்கடிதம் அனுப்பினார். இந்த இடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் எழுத்து தேர்வுநடத்தித்தான் தகுதியானவர்களை நிரப்ப வேண்டும்.ஆனால் இதுவரை எழுத்து தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வுவாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் முதுநிலை படிப்புடன் பி.எட். முடித்துவேலைக்காக காத்திருக்கும் சிலர் நேற்று சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு வந்தனர்.அவர்கள் கூறுகையில், உடனடியாக முதுநிலை ஆசிரியர்களைதேர்வு செய்வதற்கான தேர்வை நடத்தவேண்டும் என்றுதெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement