Ad Code

Responsive Advertisement

காலிப் பணியிடங்கள் 3 லட்சமாக அதிகரிக்கும்:அரசு ஊழியர் சங்கத் தலைவர் தகவல்

அரசு ஊழியர் காலி பணியிடங்கள் 201718ல் மூன்று லட்சமாக அதிகரிக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது:
பணியாளர்கள் நியமனத்தில் அரசு அக்கறை காட்டவில்லை. அனைத்து துறைகளிலும் 2.50 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.

இது 2017-
18ல் 3 லட்சமாக

அதிகரிக்கும்.பொதுப்பணித்துறை யில் பொறியாளர்கள் 90 சதவீதம் பேர் 2019ல் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இதனால் அத்துறையில் பணிகள் முடங்கும் அபாயம்

உள்ளது. அதற்குள் அரசு பணி நியமனங்கள் நடைபெற வேண்டும்.

புதிய பென்ஷன்

திட்டத்தை ரத்து செய்வது, காலி இடங்களை நிரப்புவது, எட்டாவது சம்பளக்குழு அமைத்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதன் பின்பும் கோரிக்கைகள் நிறை

வேறாவிட்டால் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement